தமிழகம் முழுதும் வாக்காளர் வரைவு பட்டியல் தயார் செய்வதற்காக, வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி நேற்று துவங்கியது; அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடக்கிறது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி முடிந்து, வரைவு பட்டியல் தயாரிக்கப்படும். ஒருங்கிணைந்த வரைவு பட்டியல், அக்., 17ல் வெளியிடப்படும். அன்று முதல், நவ., 30 வரை பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பம் அளிக்கலாம்.