மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில், ‘ஜி – 20’ அமைப்பின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியது: மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளை பயன்படுத்துவதில், நம் பணியாளர்களுக்கு பயிற்சி தரவேண்டும். திறன், மறு- திறன் மற்றும் மேம்பாடு ஆகியவை, எதிர்கால பணியாளர்களுக்கான தாரக மந்திரங்கள். இவற்றை அடிப்படையாக வைத்தே, ‘திறன் இந்தியா’ திட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. நான்காவது தொழில் புரட்சி நடக்கும் இந்த காலகட்டத்தில், வேலைவாய்ப்பிற்கான முக்கிய உந்துசக்தியாக தொழில்நுட்பம் மாறி உள்ளது. அதை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், இணையம் சார்ந்த சாதனங்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற துறைகளில், சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. புதிய தலைமுறை தொழிலாளர்களுக்காக, புதிய கொள்கைகளை வடிவமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
Home Breaking News ‘ஜி – 20’ அமைப்பின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டதில் பிரதமர் உரை