வியட்நாமுக்கு கிர்பான் போர் கப்பல் பரிசளிப்பு – இந்தியா

0
131

இந்திய கடற்படையில் 32 ஆண்டுகள் சேவையாற்றிய ஐ.என்.எஸ். கிர்பான் என்ற சிறியரக ஏவுகணை தாங்கி போர் கப்பலை தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் கடற்படைக்கு மத்திய அரசு பரிசாக அளித்தது. நம் கடற்படையில் 1991ல் இணைக்கப்பட்ட ஐ.என்.எஸ். கிர்பான் போர் கப்பல் 32ஆண்டுகளாக கிழக்கு கடற்படையில் சேவை ஆற்றியது. மொத்தம் 295 அடி நீளமும் 34 அடி அகலமும் 1450 டன் எடையும் உடைய இந்த கப்பல் 12 அதிகாரிகள் மற்றும் 100 மாலுமிகளால் இயக்கப்பட்டு வந்தது. நம் கடற்படையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்ட இந்த போர் கப்பல் நம் நட்பு நாடான வியட்நாம் கடற்படைக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. வியட்நாமின் கேம் ரான் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.என்.எஸ். கிர்பானை நம் கடற்படை தலைமை தளபதி அட்மிரல்ஆர்.ஹரிகுமார் வியட்நாம் கடற்படையிடம் ஒப்படைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here