பூமித்தாயை பாதுகாப்பது, பராமரிப்பது நமது அடிப்படை கடமை – பிரதமர்

0
201

புதுடெல்லி,
ஜி-20 நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை குறித்த அமைச்சர்கள் மாநாடு இன்று சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக கலந்து கொண்டார். பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் தெற்குலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இயற்கை நமக்கு வழங்குவதைப் போல நாமும் இயற்கைக்கு வழங்க வேண்டும். பூமித்தாயை பாதுகாப்பது, பராமரிப்பது என்பது நமது அடிப்படை கடமை.பிளாஸ்டிக் மாசுவை முடிவுக்கு கொண்டுவர ஜி20 நாடுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச அளவிலான சட்டப்பூர்வ கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் அடிப்படையில் உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். பல்லுயிர் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் செறிவூட்டல் ஆகியவற்றில் நடவடிக்கை எடுப்பதில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது.இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here