காஷ்மீரில் ராணுவ வீரர் மாயம் : பயங்கரவாதிகள் கடத்தினரா

0
217

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம் குல்காம் மாவட்டத்தில் உள்ள அஜதல் பகுதியைச் சேர்ந்தவர் ஜாவித் அஹமது, 25. ராணுவ வீரரான இவர், லடாக்கின் லே பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், விடுமுறையில் சொந்த ஊர் வந்த ஜாவித், இன்று மீண்டும் பணியில் சேர இருந்தார். இந்நிலையில், வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்க நேற்று முன்தினம் தன் காரில் சவல்ஹம் பகுதிக்கு ஜாவித் சென்றார். நீண்ட நேரமாகியும், அவர் வீடு திரும்பாததை அடுத்து, பல இடங்களில் தேடிய குடும்பத்தினர், கடை வீதியில் ரத்தக் கறையுடன் அவரது கார் நிற்பதை பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர், குல்காம் மாவட்டம் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் அவரை கடத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here