ஆகஸ்டு 2, 1876 ஆம் ஆண்டு வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசிலிபட்டியில் பிறந்தார். நிலவியலில் பட்டம் பெற்று, ஆந்திரப் பிரதேசத்தில் வைரச் சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால் இவர் ‘வைரம் வெங்கய்யா’ என்றும் அழைக்கப்பட்டார். விஜயவாடாவின் தேசிய மாநாட்டின்போது தேசிய கொடியை அறிமுகப் படுத்தினார். பிங்கலி வெங்கய்யா உள்ளிட்டோர் வடிவமைத்த மூவர்ண கொடிதான் தற்போது இந்தியாவின் தேசியக்கொடியாக பட்டொளி வீசி பறக்கிறது. 2009 ல் இவரது உருவம் பொறித்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது