மணிப்பூரில் ஓராண்டில் ரூ.1,610 கோடி போதை பொருள் பறிமுதல்

0
188

2022 ஜூலை – கடந்த ஜூலை வரையிலான ஓராண்டில் மட்டும், 1,610 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை, அசாம் ரைபிள்ஸ் படையினர் கைப்பற்றி உள்ளனர். இது குறித்து, பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: மணிப்பூரில், மே மாதத்தில் கலவரம் துவங்கியதில் இருந்து, இந்தியா – மியான்மர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எல்லையிலும், மாநிலத்திலும் பாதுகாப்புப் படை வீரர்கள் முழு நேரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியின் போது, போதைப் பொருள் கடத்தல்காரர்களை அசாம் ரைபிள்ஸ் படையினர் பிடிக்கின்றனர்.2020 – 21ல், 1,200 கோடி ரூபாய்; 2021 – 22ல், 850 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பாரபட்சமின்றி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here