உத்தரப்பிரதேசம் – 1980 மொராதாபாத் கலவர அறிக்கை சட்டசபையில் வைக்கப்பட்டது

0
182

லக்னோ. விதான்சபாவின் மழைக்கால கூட்டத்தொடரில், மொரதாபாத் கலவர அறிக்கை, சபையில் வைக்கப்பட்டது. 1980 ஆகஸ்ட் மாதம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள இத்காவில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரம் ஈத் தினத்தன்று தொடங்கியது. இந்த கலவரத்தில் சுமார் 83 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அறிக்கையின்படி, முஸ்லிம் லீக்கின் இரண்டு தலைவர்கள் இந்த கலவரத்தை செய்திருக்கிறார்கள். ஏறக்குறைய 43 ஆண்டுகளுக்குப் பிறகு, மொராதாபாத் கலவர அறிக்கையை உத்தரப் பிரதேச அரசு சட்டசபையில் வைத்துள்ளது. கலவரத்திற்குப் பிறகு நீதிபதி சக்சேனா கமிஷன் அமைக்கப்பட்டது. சக்சேனா கமிஷன், விரிவாக விசாரித்து, 1983 நவம்பர் மாதம் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here