ஆகஸ்டு15 நமது சுதந்திர தினம் – சங்கநாதத்தின் பணிவான நல்வாழ்த்துகள்

0
209

ஆகஸ்டு15 நமது சுதந்திர தினம் – சங்கநாதத்தின் பணிவான நல்வாழ்த்துகள்
“சங்க நாதம்”
தேசிய எழுச்சி முழக்கம்
மதிப்பிற்குரிய சகோதர/ சகோதரி
அன்பு வணக்கங்கள்!
சங்கநாதத்தின் பணிவான நல்வாழ்த்துகள்!!
நமது பாரத தேசத்தின், அதன் தேசியத்தின் சிறப்பியல்புகளையும், உலகிற்கே வழிகாட்டியாய் இருந்துவரும் நமது தெய்வீகத்தின் உயர்வுகளையும் நமது நாட்டு மக்களின் மனங்களில் பதிய வைத்திட, தாய்நாட்டின் மீதும் நமது ஆன்மீகத்தின் மீதும் கெளரவமும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்திட பல்வேறு செயல்திட்டங்கள் மூலம் முயற்சி செய்து வருகின்றோம்.
ஆகஸ்டு15 நமது சுதந்திர தினம்:
ஆகஸ்டு 15, 2023 செவ்வாய்கிழமை 76வது சுதந்திர தினத்தன்று நாம் நமது வீட்டில் காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் மாடியிலோ, வீட்டு வாயிலிலோ நமது தாய்திரு நாட்டின் உயிரினும் மேலான தேசியக் கொடியினை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஏற்றி “தேசிய கீதம்” பாடிட பணிவுடன் வேண்டுகிறோம்.
வாய்ப்பிருப்பின் நமது சுதந்திரத்திற்காக தன்னையே அர்ப்பணித்த தேசத்தியாகிகளின் திருவுருவப்படங்கள் அலங்கரித்து வைத்து மலர் அஞ்சலி செலுத்திடலாம்.
நமது பாரத அரசின் முயற்சியால் நாடு முழுவதும் எல்லா அஞ்சல் அலுவலகங்களிலும் நமது தேசியக் கொடி ரூ.25/- க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை நாமும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த தேசியத் திருநாள் கொண்டாட்டத்தின் படங்களை நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களை ஊக்கப்படுத்துவோம்.
பணிவுடன்
“சங்கநாதம்” குழுவினர்.
“வந்தே மாதரம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here