எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்ளும் தமிழக இளைஞர்களே இவரைப் பின்பற்றுங்கள்

0
188

கேரளம் காசர்கோட்டைச் சேர்ந்த ரஞ்சித். ஆர். பணத்தூர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய பெற்றோர்கள் படித்தது வெறும் 5 ஆம் வகுப்பு வரை. களிமண் கொண்டு கட்டப்பட்ட வீடு. +2 மற்றும் பி.ஏ.பட்டப்படிப்பிற்கு தனது கிராமத்திலுள்ள டெலிபோன் அலுவலகத் தில் இரவு நேர வாட்ச் மேனாக வேலை செய்து சம்பாதித்துள்ளார். தற்போது சென்னை ஐ.ஐ.டி. யில் படித்து பொருளாதாரத்தில் பி.ஹெச் டி (P.hd) பட்டம் பெற்றுள்ளார். தாய் மொழியான மலையாளத்தில் மட்டுமே பேசத் தெரிந்தவர். தனது கைடு (Guide) அளித்த பயிற்சியினால், தன்னம்பிக்கை பெற்று தற்போது ஆங்கிலத்தில் நன்கு பேசிடக் கற்றுக் கொண்டுள்ளதாக ரஞ்சித் கூறுகிறார். ராஞ்சி ஐ.ஐ.எம். இல் பேராசிரியர் வேலை கிடைத்துள்ளது. விரைவில் அங்கு செல்ல இருக்கிறார். சிறு வீட்டில் தனது சகோதரியுடன் வசித்து வருகின்ற பெற்றோர்களுக்கு நல்லதொரு வீடு கட்டித் தரவேண்டும். பொருளாதாரத் தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு உதவிட வேண்டும் என்கிறார். வாழ்க்கை நன்கு அமைந்த பிறகு எழை மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைத் திடவும், பெரிய உலகம் இருப்பதை அவர்களுக்குக் காண்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது என்கிறார். நம்பிக்கையே முன்னேற்றத்திற்கு முதல் படி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here