மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிக்கு டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 2015ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, 2019ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் கட்டுமானப் பணிகள் எதுவும் இன்னும் துவங்கவில்லை. இதனால் திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து, மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசும், மத்திய அரசும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்நிலையில், மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் செப்டம்பர் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது