சர்ச்சைக்குள்ளாகும் சட்டம்

0
454

காசி கோயில் மற்றும் சர்ச்சைக்குரிய ஞானவாபி அமைப்பு தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க வாய்ப்புள்ளது என்ற நிலையில், வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக சர்ச்சைகளும் வழக்குகளும் மீண்டும் தொடர்கின்றன. வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தின் முன் சவாலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமி விவகாரம் தவிர அனைத்து வழிபாட்டுத் தலங்களின் இயல்புகளும் ஆகஸ்ட் 15, 1947ல் இருந்ததைப் போலவே பராமரிக்கப்படும். அந்தத் தேதியில் உள்ள வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையை மாற்றுவது தொடர்பாக எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடரக்கூடாது என்று அந்த சட்டம் கூறுகிறது. முந்தைய உண்மையான காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சிருங்கார் கௌரிக்கு வழிபாடுகள் நடத்தும் வழக்கின் தொடர்ச்சியாக உள்ளூர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் தொடர்பாக அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி நிர்வாகக் குழுவின் மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க வாய்ப்புள்ளது. இது வழிபாட்டு இடங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991ன் விதிகளுக்கு முரணானது என்று முஸ்லிம் அமைப்பு கூறுகிறது. ஆனால், இந்த சட்டம் ஹிந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களின் மத உரிமையை மீறுவதாக பலர் வாதிடுகின்றனர். முன்னதாக, இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது பா.ஜ.க. அந்த சட்டத்தை எதிர்த்துப் பேசியதுடன் வெளிநடப்பும் செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here