நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம் தேதி ரஷ்யா விண்ணில் செலுத்தியது. ஆனால், திட்டமிட்டபடி நிலவில் இந்த விண்கலத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலவில் மோதி லூனா-25 விண்கலம் நொறுங்கி, தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இந்த திட்டத்தில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானி மைக்கேல் மரோவ்(90) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லூனா-25ஐ நிலவில் தரையிறக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. நாங்கள் 50 ஆண்டுகளுக்கு பின்னர் நிலவை ஆராய விண்கலத்தை அனுப்பினோம். நிலவு குறித்த ஆராய்ச்சியில் இது புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று நினைத்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இவ்வாறு மைக்கேல் மரோவ் தெரிவித்துள்ளார்.