சந்திரயான் -3 திட்டமிட்டபடி நாளை மாலை நிலவின் தென்பகுதியில் தரையிறங்குகிறது

0
141

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை 5.47 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பின் நேரத்தில் சற்று மாற்றம் செய்யப்பட்டு, 6.04 மணிக்கு தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ இன்று அறிவித்துள்ளது. தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நாளை மாலை நிலவில் தரையிறங்கும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. ‘நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சந்திரயான் -3ன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. திட்டமிட்டப்படி நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்பகுதியில் லேண்டர் தரையிறக்கப்படும். சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறக்கப்படும் நிகழ்வை நாளை மாலை 5.20 மணி முதல் நேரலையில் பார்க்கலாம்’ என இஸ்ரோ டுவீட் செய்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here