ரம்பா (RAMBHA-): ரேடியோ அனாடமி ஆப் மூன் பவுண்ட் ஹைபர் சென்சிடிவ் அயோனோஸ்பியர் அண்ட் அட்மாஸ்பியர். அணுக்களின் உள்ள அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களின் மாற்றங்களையும், பிளாஸ்மாவில் உள்ள அடர்த்தியையும் நேரத்தை பொறுத்து அளவிடும் கருவி இது.
சேஸ்ட் (CHASTE): சந்திராஸ் சர்பேஸ் தெர்மோ பிசிக்ஸ் எக்ஸ்பெரிமென்ட்.நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்ப மாறுபாடுகள், வெப்ப பண்புகள் குறித்து அளவீடு செய்யும் கருவி.
இல்சா (ILSA): இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் பார் லுானார் செயிஸ்மிக் ஆக்டிவிட்டி.நிலவின் நிலப்பரப்பில் ஏற்படும் நில அதிர்வுகள், நில விரிசல்கள், மேடுகள், பள்ளங்கள் உள்ளிட்டவை குறித்து அளவீடு செய்யும் கருவி.
ஏபிஎக்ஸ்எஸ் (APXS): ஆல்பா பார்டிக்கல் எக்ஸ் ரே ஸ்பெக்ட்ரோமீட்டர். நிலவின் மேற்பரப்பில் உள்ள வேதி சேர்மங்கள், நுண்ணுயிர் சேர்மங்கள் அதன் உருவாக்கத்திற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யும். லிப்ஸ்
(LIBS): லேசர் இண்டியூஸ்ட் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோமீட்டர். மக்னீசியம், அலுமினியம், சிலிகான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம், இரும்பு உள்ளிட்டவற்றின் மூலக்கூறுகள் குறித்து நிலவின் பாறைகளிலும், மணலிலும் ஆய்வு மேற்கொள்ளும்.