ரக்ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு பந்தம் என்பது பொருள். இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனித கயிறு கட்டுவர். தீயவற்றில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் சகோதரிகள் பிரார்த்தனை செய்து புனித கயிறு கட்டுவது வழக்கம், தங்கள் அன்பை தெரிவிக்கும் விதமாக சகோதரர்கள், சகோதரிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்குவார்கள்.