‘கூகுள்’ நிறுவனத்தின் யு டியூப் சமூக ஊடகத்தில், தினசரி செய்திகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வீடியோக்கள் கிடைக்கின்றன. இதில் பார்வையாளர்களை அதிகம் பெற வேண்டும் என்பதற்காக, ஒருசில யு டியூபர்கள் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்கின்றனர். இது போன்ற வீடியோக்களை கண்டறிந்து, யு டியூப் சமூக ஊடகம் நீக்கி வருகிறது. இந்நிலையில், நம் நாட்டில் கடந்த ஜன., மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும், சமூக வழிகாட்டுதல் விதிகளை மீறியதற்காக, 19 லட்சம் வீடியோக்களை யு யூடிப் நீக்கி உள்ளது. விதிகளை மீறியதற்காக, அமெரிக்காவில் 6.55 லட்சம்; ரஷ்யாவில் 4.92 லட்சம் மற்றும் பிரேசிலில் 4.50 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. துவக்கத்தில் இருந்தே சமூகத்திற்கு தீங்கான வீடியோக்களை புறக்கணித்து வருகிறோம். இதில் எந்த சமரசமும் செய்ய மாட்டோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.