இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் தமிழக வீரர் குகேஷ் முதலிடத்திற்கு முன்னேறினார். குகேஷ் 2758 புள்ளிகளுடன் சர்வதேச அளவில் 8வது இடத்திற்கு முன்னேறினார். இதன்மூலம் இந்திய செஸ் தரவரிசையில் 37 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தின் சாதனை பயணம் முடிவுக்கு வந்தது. விஸ்வநாதன் ஆனந்த் 2754 புள்ளிகளுடன் சர்வதேச அளவில் 9வது இடத்திலும், இந்திய அளவில் 2வது இடத்திலும் உள்ளார். சர்வதேச பட்டியலில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 19வது இடத்தில் உள்ளார்.