தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் என்.ஐ.ஏ., சோதனை

0
3439

என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அல் குவைதா பயங்கரவாதிகள், இந்தியாவில் இஸ்லாமிய நாட்டை ஏற்படுத்த வேண்டும் என சதி திட்டம் தீட்டி செயல்பட்டு வருகின்றனர். தெஹ்ரீக் – இ – தலிபான் பயங்கரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் செயல்படுகிறது. இந்த அமைப்பு இந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்த வேண்டும். அதற்கு இளைஞர்களை மூளைச்சலவை செய்து, ஆயுத பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறது. அப்பணிகளில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி, டிஜிட்டல் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளோம். ஆப்கானிஸ்தானில் நிலம் வாங்க, வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பி இருப்பதை கண்டறிந்து உள்ளோம். நாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here