மணிப்பூர் குறித்த ஐ.நா.,வின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இந்தியா, அவை ‛‛தேவையற்றவை, தவறானவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது” எனக்கூறியுள்ளதுடன் அங்கு அமைதி நிலவி வருகிறது என தெரிவித்துள்ளது மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஐ.நா.,வின் மனித உரிமை அமைப்பின் சிறப்பு குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது மணிப்பூரில் தீவிரமான மனித உரிதம மீறல்கள் நடக்கிறது. வீடுகள் அளிப்பு, மக்கள் வெளியேற்றம் பாலியல் துன்புறுத்தல், தொந்தரவு மற்றும் மோசமான சூழ்நிலையில் வசிக்கின்றனர் என தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள இந்தியா, மணிப்பூரில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவுகிறது. இது தொடர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. ஐ.நா.,வின் கருத்துகளை முற்றிலும் நிராகரிக்கிறோம். இந்த கருத்து தவறானது. அனுமானத்தின் அடிப்படையில் அமைந்தவை . தேவையற்றவை. மணிப்பூரில் நிலவும் சூழ்நிலை மற்றும் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை ஐ.நா., புரிந்து கொள்ளவில்லை. இந்தியா பதிலில்