G-20 மாநாட்டில் நடராஜர் சிலை

0
461

புதுதில்லியில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாடு நடைபெறவுள்ள ப்ரகதி மைதானத்தின் (6 வது வாயிலில்) பாரத் மண்டபத்தின் முன்பு 28 அடி நடராஜர் சிலை வைக்கப்பட உள்ளது.
ஆடல் அரசன் எனப் போற்றப்படும் நடராஜரின் நடனத்தினால் தான் இந்த உலகே இயங்கிக் கொண்டிருக் கிறது (His cosmic power of creation and destruction.) என்பது நமது நம்பிக்கை.
19 டன் எடை கொண்ட மிக உயரமான நடராஜர் சிலை இது.
தங்கம், வெள்ளி, தாமிரம், பாதரசம், இரும்பு, துத்தநாகம், ஈயம், தகரம் என (அஷ்ட்ட தாதுக்கள்) 8 உலோகக் கலவையினால் இது தயாரிக்கப் பட்டுள்ளது.
சிதம்பரம், கோனேரிராஜபுரம் மேலும் பல சோழர்கள் கால சிலைகளைப் போன்று இச்சிலையை சுவாமிமலை ஶ்ரீகந்த ஸ்தபதி உருவாக்கியுள்ளார்.
முன்பெல்லாம் ஏதாவது ஒரு சர்வதேச நிகழ்ச்சி நம் நாட்டில் நடைபெற்றால் தாஜ்மஹால் போன்றவைகளே பாரதத்தின் அடையாளங்களாக முன்வைக்கப்பட்டன.
இந்நிலை 2014 முதல் முற்றிலும் மாறி பாரதத்தின் உண்மையான அடையாளங் கள் முன்வைக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here