குஜராத்தில் சமீப காலமாக போலி ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்டவற்றை கொடுத்து சிலர் கடன் பெற்றனர். ஆனால், கடனை அவர்கள் திரும்பச் செலுத்தவில்லை.’அடையாள அட்டையில் உள்ள முகவரிக்கு தொடர்பு கொண்டபோது தான், அந்த அடையாள அட்டை போலியாக தயாரிக்கப்பட்டது என தெரியவந்தது.இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், சூரத்தில் வசித்து வந்த இருவரை கைது செய்தனர்.அவர்களில் ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோம்நாத் பிரமோத் குமார்.இவர் பெயரில் ஏராளமான மொபைல் போன் சிம் கார்டு எண்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போலியான ஆதார், பான் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை தயாரித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அரசின் புள்ளி விபர தொகுப்புக்குள் ஊடுருவி, அதில் உள்ள தகவல்களை திருடி நடந்த இந்த மோசடி, நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது