ஜத்தீந்திர நாத் தாஸ்

0
69

ஜத்தீந்திர நாத் தாஸ் நினைவு நாள் (13.09.1929)


 

1929 ஜூன் 14 ஆம் நாள் தனது புரட்சிகர நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்ட இவர் இலாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். இலாகூர் சிறையில் ஆங்கிலேயக் கைதிகளுக்கு அனைத்து வசதியும் செய்து தரப்பட்டது. இந்தியக் கைதிகளோ இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர். கந்தல் உடையும், கழிவு உணவும் அவர்களுக்குத் தரப்பட்டது. சமையல் அறையோ கரப்பான் பூச்சிகளும் எலிகளும் நிறைந்த இடமாயிருந்தது. இந்நிலைக்கு எதிராக ஜத்தின் தாஸ் இன்னும் சில போராளிகளுடன் இணைந்து 1929 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் நாள் சாகும் வரை உண்ணா நோன்பைத் துவக்கினார். சிறைக் கண்காணிப்பாளர் இவர்களை அடித்து, உதைத்து தண்ணீர் தர மறுத்து துன்புறுத்தினார். வலுக்கட்டாயமாக வாயில் உணவைத் திணித்தார். ஆனால் தாஸ் உண்ண மறுத்து விட்டார் 63 நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டம் ஜத்தின் தாசின் மரணத்தில் முடிவுற்றது. செப்டம்பர் 13 ஆம் நாள் ஜத்தின் தாஸ் உயிர் நீத்தார். இலாகூரிலிருந்து கொல்கத்தாவிற்கு ஜத்தின் தாசின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டங் கூட்டமாய்க் கூடி வந்து இவருக்கு மரியாதை செலுத்தனர். 90 ஆண்டுகளுக்கு முன்பு தி ட்ரிப்யூனில் ஆங்கிலப் பத்திரிக்கையில் அச்சிடப்பட்ட இறந்த ஜடின் தாஸின் புகைப்படம் இந்திய மக்களின் மனசாட்சியை உலுக்கியது. புரட்சியாளர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் கொள்கையை மாற்றுமாறு பிரிட்டிஷ் பேரரசை கட்டாயப்படுத்தியது. கொல்கத்தாவில் சுடுகாட்டை நோக்கி இரண்டு மைல் நீளத்திற்கு ஊர்வலமாய் மக்கள் திரண்டனர். இவரின் ஐம்பதாம் ஆண்டு நினைவு நாளான 1979 செப்டம்பர் 13 ஆம் நாளிலில் இந்திய அரசு இவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையொன்றை வெளியிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here