காஷ்மீரில் 7 நாட்களாக நடந்து வந்த என்கவுண்ட்டர் நிறைவு

0
1777

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வந்தது. இந்நிலையில், 7 நாட்களாக நடந்து வந்த என்கவுண்ட்டர் துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்துள்ளது. தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட ஒரு பயங்கரவாதியின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு பயங்கரவாதி உடலை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here