காலிஸ்தான் ஆதரவாளர் சுக்தோல் சிங் அலியாஸ் சுகா கொல்லப்பட்டார்

0
242

2017 ஆம் ஆண்டு பஞ்சாபிலிருந்து கனடாவுக்கு தப்பிச் சென்ற கேங்ஸ்டர் சுக்தூல் சிங், கனடாவின் வின்னிபெக்கில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர்.
காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் கேங்ஸ்டர் சுக்தூல் சிங், கனடாவின் வின்னிபெக்கில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப் போலீஸ் வட்டாரங்களின்படி, சிங் காலிஸ்தான் சார்பு படைகளில் சேர்ந்தார்.
உளவுத்துறையின் தகவலின்படி, அவர் கனடாவின் வின்னிபெக்கில் கும்பல்களுக்கிடையேயான மோதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர் என்ஐஏவின் மிகவும் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here