வீரர்களுக்கு மட்டுமல்ல ராணுவத்தில் சேவை புரிந்து வருகிற நாய்கள், குதிரை கள் & கழுதைகள் உட்பட பிராணிகளுக்கும் பதவி உயர்வுகள், விருதுகள் வழங்கப்படு கின்றன. 1971 ஆம் ஆண்டு பாரத – பாகிஸ்தான் போரில் நமது ராணுவத்தில் சேவை புரிந்து வந்த பெடாங்கி (Pedongi) என்ற கழுதையை பாகிஸ்தான் ராணுவம் பிடித்து வைத்துக் கொண்டது. சில நாட்கள் சென்ற பிறகு அக்கழுதை பாரதத்திற்கு திருப்பி வந்துவிட்டது. வெறுமனே வரவில்லை MMG துப்பாக்கி & 2 பெட்டி நிறைய வெடி பொருட்களுடன் திரும்பி வந்தது. பின்னர் பெடாங்கிக்கு ராணுவத்தின் 3 வது உயர் விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. ஒரு நாள் காலையில் மிஷின் கன், தோட் டாக்கள், ஏராளமான வெடி பொருட்களை சுமந்து கொண்டு போர்முனைக்குச் செல்ல வேண்டிய பெடாங்கி ஆள் இல்லாமல் இருக்கும் எல்லைப் பகுதியைத் தாண்டி தான் சேவை புரிந்து வந்த படைப்பிரிவி ற்கு திரும்பி வந்து சேர்ந்தது. மிகவும் களைப்பாக காணப்பட்ட அது 20 கிமீ தொலைவைக் கடந்து பாரதக் காவல் நிலையத்தை வந்தடைந்துள்ளது. தெரிந்த முகமாக இருப்பதைக் கண்ட நமது படை வீரர்களுக்கோ பெரும் அதிர்ச்சி. நமது பெடாங்கி தான் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். பிராணிகளாக இருந்தாலும் கூட தன்னை வளர்த்து பயிற்சி அளித்த படைப் பிரிவிற் கும், தேசத்திற்கும் விஸ்வாசமாகவே இருந்து சேவை புரிந்து வருகின்றன.