ஆசிய விளையாட்டு : துப்பாக்கி சுடுதலில் தங்கம் பதக்கம்

0
230

ஆசிய விளையாட்டில் இன்று இந்தியா துப்பாக்கிச்சுடுதலில் தங்கமும், ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் வெள்ளியும் வென்றது. மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங், பாலக் மற்றும் திவ்யா சுப்பராஜூ ஆகியோர் பங்கேற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி நூலிழையில் சீனாவிடம் தங்கப் பதக்கத்தை தவறவிட்டது. சீன அணி 1736 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், இந்திய அணி 1731 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும் வென்றது. அதேபோல், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் 17 வயதான பாலக் தங்கப் பதக்கமும், 18 வயதான ஈஷா சிங் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். நடப்பு ஆசிய போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இந்தியாவுக்கு 6 தங்கம் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here