நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் தற்போது, 33 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்ப டுகின்றன. இதில், தெற்கு ரயில்வேக்கு அதிகபட்சமாக ஏழு ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு, ‘ஸ்பேர்’ ரயில் போக, மீதமுள்ள ஆறு ரயில்கள், சென்னை சென்ட்ரல் – மைசூர், சென்ட்ரல் – கோவை, எழும்பூர் – திருநெல்வேலி உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, வடக்கு ரயில்வேக்கு 5, மத்திய ரயில்வேக்கு 4, மேற்கு ரயில்வே, வடக்கு மேற்கு ரயில்வேக்கு தலா 3 ரயில்களும், தெற்கு மத்திய ரயில்வே, தெற்கு கிழக்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வேக்கு தலா இரண்டு ரயில்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு ஆக., மாதத்திற்குள் நாடு முழுதும், 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.