மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள், குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் பிறந்தார். மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்.‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது.“அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை, இந்திய அறநெறியை போராட்ட உத்தியாக முன்னெடுத்தவர். ஆங்கில அரசுக்கு எதிரான ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் விடுதலை வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. நாட்டின் பிரிவினையை எதிர்த்தவர். விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் இயக்கம் கலைக்கப்படவேண்டும் என்று தீர்க்க தரிசனத்தோடு சொன்னவர்.ராமனின் மேல் மிகுந்த பக்தி உடையவர். ராமாஜ்யம் அமைய வேண்டும் எனக் கூறியவர். #சான்றோர்தினம்