பிரதமரின் வீட்டு வசதி திட்டம்

0
305

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, ‘பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள பயனாளிகளுக்கு இந்த நிதியாண்டில் 80 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று தமது பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். கிராமப் பகுதிகளில் 52 லட்சம் வீடுகள், நகர்புற பகுதிகளில் 28 லட்சம் வீடுகள் என இந்த 80 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன. இதற்காக ரூ. 48,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2022 மார்ச் 16 நிலவரப்படி 2.28 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 1.75 கோடி வீடுகளுக்கான பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. 2022 – 23ம் நிதியாண்டில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ் 52.78 லட்சம் வீடுகளுக்கான பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here