கடற்படை துணை தளபதியாக தருண் சோப்தி பொறுப்பேற்பு

0
137

கடற்படையின் தளபதியாக ஹரிக்குமார் உள்ள நிலையில், துணை தளபதியான சஞ்சய் மஹிந்துரு, நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதை அடுத்து, வைஸ் அட்மிரல் தருண் சோப்தி, புதிய துணை தளபதியாக புதுடில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றார். கடந்த, 35 ஆண்டுகளுக்கும் மேலாக கடற்படையில் பணியாற்றி வரும் தருண் சோப்தி, கமாண்டர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக, ஐ.என்.எஸ்., நிஷாங்க், ஐ.என்.எஸ்., கோரா உள்ளிட்ட போர்க்கப்பல்களை திறம்பட கையாண்டுஉள்ளார். கடற்படை பணியாளர்களின் தேர்வாணைய இயக்குனராகவும், ரஷ்யாவில் உள்ள இந்திய துாதரகத்தின் கடற்படை அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார். இந்திய கடற்படை பயிற்சி மையத்தின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் 2021ல் வைஸ் அட்மிரலாக தருண் சோப்தியை, மத்திய அரசு நியமித்தது. இவரது சேவையை பாராட்டும் வகையில் 2020ல் வசிஷ்ட சேவா விருதும், 2022ல் அதி வசிஷ்ட சேவா விருதும் வழங்கி கவுரவிக்கபட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here