தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கோங்க – கனடாவுக்கு இந்தியா உத்தரவு

0
221

காலிஸ்தான் விவகாரத்தால் மோதல் முற்றி உள்ள நிலையில் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக, கனடா பார்லி.,யில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
இந்தியா – கனடா உறவில் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவில் உள்ள துாதரகம் மற்றும் துணை துாதரகம் செல்லும் இந்திய துாதர்கள் பகிரங்கமாக மிரட்டப் படுகின்றனர்.
இந்நிலையில் கனடாவின் 40 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றுக்கொள்ள இந்தியா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலிஸ்தான் விவகாரத்தால் மோதல் முற்றி உள்ள நிலையில் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. அக்டோபர் 10ம் தேதிக்குள் சுமார் 40 தூதக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here