திருப்பூர் குமரன்

0
140

திருப்பூர் குமரன் அக்டோபர் 4, 1904 ல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். இவரது இயற்பெயர் குமாரசாமி முதலியார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது, தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில், 1932 சனவரி 10 ஆம் தேதியன்று திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டார்.கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். கீழே விழுந்தநிலையிலும், அவர் தன் கையில் இருந்த, அக்காலத்தில் சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட காங்கிரஸ் மூவர்ண கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார். இதனால் “கொடிகாத்த குமரன்” என்றும் அறியப்படுகிறார்.
காந்தியின் கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here