நோபல் பரிசு பெறும் இரண்டாவது ஈரானியர் நர்கீஸ் முஹம்மதி (51) தற்போது சிறையில் இருந்து வருகிறார். பெண்களின் சுதந்திரம், உரிமைகள் ஒடுக்கப்பட்டு வரும் ஈரானில் அந்நாட்டு அரசை எதிர்த்துப் போராடி வருபவர். இது வரை 13 தடவை கைது செய்யப்பட்டு 5 தடவை குற்றவாளி என அறிவிக்கப்பட் டுள்ளார்.
51 வயதில் 31வருட வாழ்க்கை சிறையில் கழிந்துள்ளது. தண்டனையாக 154 கசை யடிகள் வழங்கிடுமாறும் தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. அது செயல்படுத்தப்பட்டதா? இல்லையா என்பது பற்றிய உண்மைத் தகவல்கள் தெரியவில்லை.2003 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரானில் மனித உரிமைகளுக்காகப் போராடி வந்த வழக்கறிஞர் ஷிரின் இபாடிக்கு (Shirin Ebadi) வழங்கப்பட்டது.
Home Breaking News 2023 அமைதிக்கான நோபல் பரிசு: நர்கீஸ் முஹம்மதி (Narges Mohammadi) தேர்வு செய்யப்பட்டுள்ளார்