ஆசியப் போட்டி: ஹாக்கி: பாரதம் தங்கம் வென்றது

0
2494

ஹாக்கி இறுதிப் போட்டியில் தற்போதைய சாம்பியன் ஜப்பானை எதிர்த்து களம் இறங்கிய பாரதம் 5-1 என்ற கோல் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது.
9 வருடங்களுக்குப் பிறகு பாரதம் ஆசிய ஹாக்கிப் போட்டியில் தங்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. ஆசியப் போட்டியில் சாம்பியன் தகுதி பெறுவது இது 4 வது தடவையாகும்.. ஜாகர்த்தாவில் நடைபெற்ற கடந்த ஆசியப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது.
இவ்வெற்றியினால் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆசிய ஹாக்கி போட்டிகளில் விளையாடிய பாரதம் எதிர் அணிகளுக்கு எதிராக அடித்த கோல்கள்:
சுற்றுப் போட்டிகளில்:
– 1) உஸ்பெகிஸ்தான்: 16-0.
– 2) சிங்கப்பூர்: 16-1.
– 3) ஜப்பான்: 4-2.
– 4) பாகிஸ்தான்: 10-2.
– 5) வங்கதேசம்: 12-0.
– அரை இறுதிப் போட்டியில்
தென் கொரியாவிற்கு எதிராக: 5-3
– இறுதிப் போட்டியில் ஜப்பானுக்கு எதிராக: 5-1.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here