இஸ்ரேல் நாட்டையும், அந்நாட்டு மக்களையும் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வோம் – அமெரிக்கா

0
307

இஸ்ரேல் நாட்டையும், அந்நாட்டு மக்களையும் காப்பாற்ற எந்தவகையான உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பேசிய அவர், இரு நாடுகளுக்கிடையேயான உறவு ஆழமாக இருப்பதால், இஸ்ரேலின் சோகத்தில் பங்கு கொள்வதாகத் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யூத எதிர்ப்பு மற்றும் யூத மக்களை துன்புறுத்துவது தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து உள்நாட்டு அச்சுறுத்தல்களை உன்னிப்பாக கவர்ந்து வருவதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here