எஸ்_வையாபுரிப்பிள்ளை

0
180

#எஸ்_வையாபுரிப்பிள்ளை #svaiyapuripillai
நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்க நரசய்யன்பேட்டை என்ற ஊரில் 1891ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி பிறந்தார்.தமிழ் ஆராய்ச்சித் துறையில் தனியிடம் பெற்று விளங்கும் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, தமிழிலும் சைவத்திலும் ஆழ்ந்த பயிற்சியுடையவர்.திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து வழக்கறிஞராகவும் பணிபுரிந்தார்.வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த காலத்தில், வையாபுரிப் பிள்ளை எழுதிப் பிரசுரமான பல கட்டுரைகளும், இலக்கிய ஆய்வுகளும் அவரை அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தன.ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மனி, மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில். அவை அனைத்தையும் கல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார் வையாபுரிப் பிள்ளை.நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். “மனோன்மணியம்” உரையுடன் தொடங்கிய அவர் 1955 இல் திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்துத் தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார்.
#சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here