பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு பீஹார் தலைநகர் பாட்னா சென்றிருந்த போது, அவரது பொதுக்கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டியதாக, கடந்த ஆண்டு ஜூலையில், பி.எப்.ஐ., நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி, கடந்த ஆண்டு செப்., மாதம், பி.எப்.ஐ., அமைப்பை மத்தியஉள்துறை அமைச்சகம் தடை செய்தது. இதை தொடர்ந்து, நாடு முழுதும் பி.எப்.ஐ., அமைப்புக்குச் சொந்தமான இடங்களிலும், நிர்வாகிகள் வீடுகளில் மத்திய விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தி வருகின்றனர் . தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில், தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனப்படும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.