சௌதி அரேபியாவிற்கு 2023 ஜனவரியில் ஹஜ் புனிதப் பயணம் சென்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜா கத்ரி 8 மாத சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். மெக்காவின் முன்பு பாரத் ஜோடோ யாத்திரை என்று எழுதப்பட்ட அட்டையை வைத்துக் கொண்டு அதை புகைப்படமெடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அதைப் பார்த்த விசா ஏஜெண்ட் மின்னஞ்சல் வாயிலாக சௌதி அரசுக்குத் தெரியப் படுத்தினார். ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ராஜா கத்ரியை சௌதி போலீசார் மறுநாள் காலையில் கைது செய்தனர். அதற்காக விசா ஏஜெண்டுககு 15,000 ரியால் பரிசு கொடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ராஜா கத்ரி முழு இருட்டு அறையில் 2 மாதத்திற்கு அடைக் கப்பட்டார். உணவாக வெறும் ப்ரெட் மட்டும் வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டு அங்கு 6 மாதங்கள் இருந்தார். 8 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்ட ராஜா கத்ரி தற்போது பாரதம் திரும்பியுள்ளார்.