இஸ்ரேல் போர் பதற்றம்: டெல்லியில் போலீஸ் குவிப்பு

0
149

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன் போராட்டம் நடத்துவதற்கு சில அமைப்புகள் முனைந்தன. இதுபோல மேலும் சில இடங்களில் இஸ்ரேல் போர் காரணமாக ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இஸ்ரேல் தூதரகம் முன் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதைப்போல சில யூத நிறுவனங்களின் அருகிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகைக்காக மக்கள் கூடிய சில முக்கியமான இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதைப்போல இமாசல பிரதேசம், கோவா மற்றும் மராட்டியம் போன்ற சில மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here