அமலாக்க துறை அரசு மணல் குவாரிகளில் 3வது முறையாக சோதனை

0
3848

தமிழகம் முழுதும் செப்., 12ல் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகம் மற்றும் குவாரிகளில், அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த, 10ல் மல்லம்பாளையம் குவாரி, நன்னியூர் குவாரிகளில், 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். மீண்டும் கடந்த, 18ல் குவாரி செயல்பட்ட காவிரியாற்று பகுதிகள், வரப்பாளையத்தில் உள்ள அரசு மணல் கிடங்கு ஆகிய இடங்களில், 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், மூன்றாவது முறையாக நேற்று காலை, 11:30 மணிக்கு மல்லம்பாளையம் மணல் குவாரியில், அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மணல் அள்ளப்பட்ட அளவு குறித்து, டிஜிட்டல் மீட்டர், ட்ரோன் கேமரா வாயிலாக, அதிகாரிகள் ஆற்றில் இறங்கி சோதனை செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here