பெங்களூர்நாகரத்தினம்மா

0
151

#பெங்களூர்நாகரத்தினம்மா
பெங்களூர் நாகரத்தினம்மா 1878 நவம்பர் 3 ஆம் நாள் நஞ்சன்கூட்டில் பிறந்தார். புகழ்பெற்ற கர்நாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞர் பண்பாட்டுச் செயல்பாட்டாளராக திகழ்ந்தவர். நாகரத்தினம்மா தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு பாடகியாக உருவானார். பின்னர், அவரது காலத்தின் சிறந்த கர்நாடக பாடகர்களில் ஒருவராக உருவெடுத்தார். இவர் கன்னடம், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பாடினார்.இவர் கலை வளர்ச்சிக்கு உதவும் புரவலராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் விளங்கினார். ஆண் ஆதிக்கம் செலுத்தும் திருவிழாவிற்குள், பெண் கலைஞர்களுக்கு அதில் பங்கேற்க சமத்துவம் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் அளவுக்கு பெண்ணிய ஆக்கிரமிப்பாளராக இருந்தார். மெட்ராஸ் மாகாண தேவதாசிகள் சங்கத்தின் முதல் தலைவராக இருந்துள்ளார். மேலும், இவர் கவிதை மற்றும் புராணக்கதைகள் பற்றிய புத்தகங்களையும் திருத்தி வெளியிட்டார். தியாகராசர் ஆராதனை விழா ஏற்பட உதவி அந்நிகழ்வில் பெண்களும் சமமாகப் பங்குபெற வழிசெய்தவர். மேலும் இவர் வெளிட்ட நூல்கள் “மத்யா பானம்” (தெலுங்கு), சமஸ்கிருதத்தில் “சிறீதியாகராஜ அஷ்டோத்திர நாமாவளி” (சமஸ்கிருதம்) “பஞ்சகீரண பௌதீகம்” (தமிழ்) போன்றவையாகும்.
#bangalorenagarathnamma #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here