மத்திய அரசு கடந்த 2019ல் ‘ஜல் ஜீவன்’ திட்டம் துவங்கியது. இந்த திட்டத்தில் இதுவரை 70 சதவீத வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு வசதி செய்து தரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாட்டின் கிராமப்புறங்களில் மொத்தமுள்ள 19 கோடியே 24 லட்சத்து, 26 ஆயிரத்து 914 வீடுகளில் இதுவரை 13 கோடியே 47 லட்சத்து, 50 ஆயிரத்து, 894 வீடுகளில் குழாய் வாயிலாக குடிநீர் வழங்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒன்பது இடங்களில் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 10 இடங்களில் 75 சதவீதத்துக்கும், 11 இடங்களில் 50 சதவீதத்துக்கும் மேலும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் குறைந்தபட்சமாக 32.36 சதவீத அளவுக்கு குழாய் குடிநீர் வசதி தரப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Home Breaking News ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் 70 % கிராமப்புறங்களுக்கு குடிநீர் குழாய் வசதி நிறைவு