சிவகங்கை இலந்தக்கரையில் ரோமானிய நாணயம்

0
18594

இலந்தக்கரை தொல்லியல் மேட்டுப்பகுதியில் இதற்கு முன் 2,000 ஆண்டுக்கு முற்பட்ட மகத பேரரசை சேர்ந்த வெள்ளி முத்திரை நாணயம், 1,300 ஆண்டுக்கு முற்பட்ட சிரிய நாட்டு தங்க நாணயமும் கிடைத்துள்ளன. தற்போது ரோமானிய நாட்டு நாணயம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இப்பகுதி பன்னாட்டு தொழில் வளம் நிறைந்த பகுதியாக இருந்துள்ளது. இங்கு உற்பத்தி செய்த பொருட்களுக்கான மூலப்பொருட்கள் வட இந்தியாவில் இருந்து வந்திருக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளுக்கு கடல் மூலம் வாணிபம் செய்துள்ளதாக தெரிகிறது. நாணயத்தின் ஒரு புறம் ரோமப்பேரரசின் உருவமும், மறுபுறம் ஆலிவ் இலைகளுக்கு நடுவில் சில எழுத்துக்களும் காணப்படுகிறது. இங்கு ஏற்கனவே காரைக்குடி அழகப்பா பல்கலை மூலம் அகழாய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சிவகங்கை மாவட்டத்தின் மற்றொரு ‘கீழடி’ தொல்லியல் தளமாக இலந்தக்கரை காணப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here