தெருவோர வியாபாரிகள் : 50 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் : 8600 கோடி கடன் வழங்கப்பட்டுளளது

0
108

Covid கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த நேரத்தில் தெருக்களில், நடை பாதைகளில் வியாபாரம் செய்து வருபவர்களுக்கு உதவிட 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு PM SVANIDHI என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. எவ்வித பிணையும் இன்றி ₹ 10,000 முதல் ₹ 50,000 வரை வங்கிகள் தெரு வியாபாரி களுக்கு கடன் வழங்கிடத் தொடங்கின. 3 ஆண்டுகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான வியாபாரிகள் இத்திட்டத்தினால்  பயனடைந்துள்ளனர். 8,600 கோடி ₹ கடன் வழங்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த 7% வட்டி. டிஜிட்டலில் பரிவர்த்தனையில் வியாபாரம்  செய்தால் ஆண்டு ஒன்றுக்கு ₹1,200 பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.மத்திய நகர்ப் புற அமைச்சகமும், வங்கி அதிகாரிகளும் இத்திட்டத்தை மறு ஆய்வு செய்த பிறகு மேலும் அதிகமான தெரு வியாபாரிகளுக்கு இத்திட்டத்தின் வாயிலாகக் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்தனர். அதனால் மேலும் 12 லட்சம் வியாபாரிகள் பயனடைந்துள்ளனர். மத்தியப் பிரதேசம், அசாம், குஜராத் மாநில அரசுகள் இத்திட்டத்தை செயல் படுத்துவ தில் முன்னிலை வகிக்கின்றன.  அகமதாபாத், இந்தோர், லக்னோ, கான்பூர் & மும்பை போன்ற நகர வியாபாரிகள் இத்திட்டத்தினால்  பெருமளவில் பயனடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here