2024 ஜனவரி 1 முதல் 15 முடிய சங்க ஸ்வயம்சேவகர்கள் கிராமங்களுக்குச் சென்று இல்லந்தோறும் மக்களை சந்திக்க இருக்கின்றனர்

0
372

(ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாலே:)
குஜராத் பூஜ் ஆர்.எஸ்.எஸ். செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் திரு. தத்தாத்ரேய ஹொசபாலே ஊடகத்தினர் சந்திப்பில் கூறியது:
ஶ்ரீராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக் கட்டளை வழங்கியுள்ள ஃபோட்டோவுடன், அங்கு பூஜை செய்யப்பட்ட அட்சதைகளை எடுத்துக் கொண்டு அயோத்தி ஶ்ரீராம ஜன்ம பூமி ஆலயத்தையும், ஶ்ரீராம் லல்லாவையும் தரிசிக்க வருமாறு பல லட்சக்கணக்கான மக்களுக்கு அழைப்பு விடுக்க ஓவ்வொரு இல்லத்திற்கும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் செல்ல இருப்பதாகத் அவர் தெரிவித்தார்.
ஶ்ரீராம ஜன்ம பூமி ஆலயப் போட்டோவும் பூஜை செய்த அட்சதையும் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டன.
ஜனவரி 1 முதல் 15 ஆம் தேதி முடிய இந்நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகக் கூறினார்.
அயோத்திக்கு நிதி சேகரிப்பதற்காக 4.5 முதல் 5 லட்சம் கிராமங்களை 45 நாட்கள் தொடர்பு கொண்டோம்.
தற்போது நேரம் குறைவாக இருப்பதால் 15 நாட்கள் மட்டும் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.
ஶ்ரீராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை திட்டமிட்டுள்ள இந்நிகழ்ச்சி வெற்றி பெற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் உதவிட உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here