கடந்த மே மாதததில் இஸ்ரேலுக்கும் பாரதத்திற்கும் ஏற்ப்பட்ட உடன்படிக்கை யின் படி 42,000 தொழிலாளர்களை அனுப்பிட பாரதம் அனுமதித்துள்ளது. பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேலுக்கு வந்து பணி செய்துவிட்டு மாலையில் திரும்பிச் சென்றிடும் பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்களுக்கு இஸ்ரேல் அனுமதி அளித்து வந்தது. அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் பயங்கர வாதிகள் நடத்திய கொடூரமான கொலைச் செயல்களுக்குப் பின்னணியில் இந்த பாலஸ்தீனியர்கள் இருந்துள்ளது தெரிய வந்துள்ளதால் இனிமேல் பாலஸ்தீனிய தொழிலாளர்களுக்கு அனுமதி அளிப்ப தில்லை என்று இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது. அதனால் இந்திய தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேர்களை அனுப்பிவைத்திடுமாறு இஸ்ரேல் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது.