அமெரிக்கா – இந்தியா இடையில் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய ஒப்பந்தம். ஆன்டனி பிளிங்கன், டெல்லி வந்தடைந்தனர். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் ஆகியோருடன் சந்தித்து பேச்சு நடத்துகின்றனர். இறுதிக்கட்டமாக பாதுகாப்பு மற்றும் வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பிலும் 2 அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 5 வது முறை அமைச்சர்கள் அளவிலான பேச்சு நடக்கிறது. இந்தியா ,அமெரிக்கா இடையில் உறவுகள் மிக வலுப்பெற்று வருகிறது. சமீபத்திய ஜ-20 மாநாட்டிற்கு அமெரிக்கா பெரும் துணையாக இருந்தது. அமெரிக்காவில் 2,70,000 இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் நிலவும் சூழல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் செயல்பாடு, இஸ்ரேல் தாக்குதல் , பசிபிப் பிராந்திய சூழல் குறித்து விவாதித்தோம். என்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் கூறினார்.