காசா மருத்துவமனையில் IDF அதிரடி சோதனை…!

0
269

இஸ்ரேல்-ஹமாஸ் போர் இன்று 40வது நாளை எட்டியுள்ள நிலையில் ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக காசாமுனை மீது இஸ்ரேல் தரைவழி, வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காசா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அல்ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் தரைப்படை சுற்றிவளைத்துள்ளது. அல்ஷிபா மருத்துவமனை வளாகத்தில் இருந்து இஸ்ரேல் படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இஸ்ரேல் படை பதிலடி கொடுத்தது. இந்நிலையில், அல்ஷிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் இன்று அதிரடியாக நுழைந்தனர். மருத்துவமனையின் தரைத்தளம் உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் படையினர் சோதனை நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here