ஜார்கண்ட் மாநிலத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று ராஞ்சியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் லார்ட் பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் சுதந்திரப் போராளிகள் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறார். அதன் பிறகு குந்தியில் 3-வது பழங்குடியின பெருமை தினத்தை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். நிகழ்ச்சியின்போது, பிரதமர் ‘விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ராவை தொடங்குகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் மோடி சுமார் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியினருக்கான சிறப்பு திட்டத்தை தொடங்குகிறார். தொடர்ந்து கிசான் திட்டத்தின் கீழ், அவர் 15வது தவணையாக சுமார் 18 கோடி ரூபாயை வழங்குகிறார்.. மேலும் ஜார்க்கண்டில் சுமார் ரூ. 7,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..
Home Breaking News ஜார்கண்டில் ரூ.24 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்களை பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்